ஜோதிடம்

புரட்டாசி மாத ராசி பலன் 2024: அதிர்ஷ்டம் பொழியப் போகும் ராசிகள் யார்?

Published

on

2024-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம், சூரியன் செப்டம்பர் 16-ஆம் தேதி கன்னி ராசியில் பெயர்ச்சி அடைவதால், சில ராசிக்காரர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டம் கிடைக்கும். சூரியன் ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் அடிப்படை காரணமாக இருப்பதால், இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு வியக்கத்தக்க வாய்ப்புகள் அமையும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

மேஷம்: புரட்டாசி மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் மற்றும் வெற்றி நிறைந்ததாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், சம்பள உயர்வு வாய்ப்பு அதிகம், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், ஆரோக்கியம் நல்லதாய் இருக்கும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல காலமாக அமையும். வெளிநாட்டில் இருந்து புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். நீண்டநாளாக நிலுவையிலிருந்த ஒப்பந்தங்கள் நிறைவேறும், நிதிநிலை மேம்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். பதவி உயர்வு வாய்ப்புகள், தொழிலில் லாபம், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் குடும்பத்தில் வசதி அதிகரிக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் பொழியும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள், வேலை தொடர்பான பயணங்கள் வெற்றியடையும், ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும். பணவரவு அதிகரித்து, வேலை தொடர்பான பயணங்கள் லாபம் தரும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேளையில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், அனைத்திலும் வெற்றி கண்டறிவீர்கள்.

Poovizhi

Trending

Exit mobile version