கிரிக்கெட்

2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

Published

on

16 வது ஐ.பி.எல். தொடரின் நேற்றைய 2வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் களம் இறங்கினர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில் மேயர்ஸ் 29 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த தீபக் ஹீடா 2 ரன்னில் வெளியேற, ராகுலுடன் குருணால் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார்.

லக்னோ 159 ரன்கள்

நிதானமாக ஆடிய ராகுல் அரைசதம் அடித்தார். மறுமுனையில் குருணால் பாண்ட்யா 18 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் ரன் ஏதும் எடுக்காமலும், ஸ்டோய்னிஸ் 15 ரன்னிலும் அவுட் ஆகினர். ராகுல் 74 ரன்னிலும் அவுட் ஆக, அடுத்து களமிறங்கிய கவுதம் 1 ரன்னிலும், யுத்வீத் சிங் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். இறுதியாக லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்தது.

ராஸா முதல் அரைசதம்

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பஞ்சாப் அணியின் சார்பில் அதர்வா டைட் மற்றும் பரப்சிம்ரன் சிங் ஆகிய இருவரும் களமிறங்கினர். டைட் ரன் ஏதும் எடுக்காமலும், பரப்சிம்ரன் சிங் 4 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மேத்யூ ஷாட் 34 (22) ரன்களும், ஹர்பிரித் சிங் பாட்டியா 22 ரன்களும், கேப்டன் சாம் கரண் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பான ஆடிய வந்த சிக்கந்தர் ராஸா 34 பந்துகளில் ஐ.பி.எல்.-ன் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

பஞ்சாப் வெற்றி 

பின் ஜிதேஷ் சர்மா 2 ரன்னில் கேட்ச் ஆக, அவரைத் தொடர்ந்து சிக்கந்தர் ராஸா 57 (41) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்பிரித் பேரர் 6 ரன்னில் வெளியேற, இறுதியில் சிறப்பாக ஆடிய ஷாருக் கான் 23 (10) ரன்களும், ரபடா ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை களத்தில் நினறனர். முடிவில் பஞ்சாப் அணி 19.3 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்து லக்னோ அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றியைப் பெற்றது.

seithichurul

Trending

Exit mobile version