இந்தியா

கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை: எந்த மாநில முதல்வரின் உத்தரவு தெரியுமா?

Published

on

மதுவிலக்கு அமல்படுத்தும் மாநிலங்களில் எல்லாம் கள்ளச்சாராயம் தலைவிரித்து ஆடியதாகவும் ஒருசிலர் காய்ச்சும் கள்ளச்சாராயம் விஷச் சாராயம் ஆக மாறி பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் மாநில முதல்வர் ஒருவர் கள்ளச் சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை என உத்தரவு பிறப்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளச்சாராய வழக்கில் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டால் மரண தண்டனை விதிக்கும் மாநில கலால் சட்டத்தை திருத்த பஞ்சாப் மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ், குருதாஸ்பூர் போன்ற மாவட்டங்களில் கடந்த ஆண்டு மட்டும் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

இதனை அடுத்தே விஷ சாராய சாவுகளை தடுக்கும் வகையில் அதற்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க பஞ்சாப் மாநில முதல்வர் முடிவு செய்துள்ளார். இதன்படி விஷ சாராய வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மாநில கலால் சட்டத்தை திருத்த அமைச்சரவை நேற்று முடிவு செய்தது. இந்த சட்டத்திற்கு பின் உயிரிழப்புகள் குறையும் என்றும் தூக்கு தண்டனைக்கு பயந்து விஷ சாராயம் அவர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தூக்கு தண்டனை விதிக்க முடியாத நிலை ஏற்பட்டால் வாழ்நாள் முழுவதும் சிறை மற்றும் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. பஞ்சாபில் உள்ள முக்கிய மூன்று நகரங்களில் கடந்த ஆண்டில் மட்டும் 111 பேர் விஷச் சாராயம் குடித்து பலியாகியுள்ளதை அடுத்து இந்த அவசர சட்டத்தை கொண்டுவர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version