இந்தியா

அக்கவுண்டை குளோஸ் செய்தாலும் அபராதம்: பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு

Published

on

வங்கியில் தொடங்கிய அக்கவுண்டை குளோஸ் செய்தாலே அபராதம் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பஞ்சாப் நேஷனல் வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கரண்ட் அக்கவுண்ட் ஓபன் செய்து அதை 14 நாட்களுக்குள் குளோஸ் செய்தால் 800 ரூபாய் அபராதம் என்றும் 12 மாதங்களுக்கு பின்பு நடப்புக் கணக்குகள் க்ளோஸ் செய்தால் அபராதம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கில் நாளொன்றுக்கு இலவசமாக இலவசமாக இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்றும் அதற்கு மேல் டெபாசிட் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மெட்ரோ நகரங்களில் மினிமம் பேலன்ஸ் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் உயர்த்பட்டுள்ளதாகவும் மினிமம் பேலன்ஸ் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றால் அதற்கான அபராத கட்டணம் நகர்ப்புறங்களை பொருத்தவரை 600 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணப்பரிவர்த்தனை பொருத்தவரை ஒவ்வொரு மாதமும் மூன்று இலவச பரிவர்த்தனைகளை மட்டுமே மேற்கொள்ளலாம் என்றும் அதற்கு மேல் பரிவர்த்தனை செய்ய ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 50 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை அடுத்து அவ்வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version