இந்தியா

பள்ளிகள் திறக்கும் முதல் மாநிலம்: ஆகஸ்ட் 2 முதல் திறக்க உத்தரவு!

Published

on

ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறக்க உத்தரவிட்டதை அடுத்து பஞ்சாப் மாநிலம் இந்தியாவிலேயே முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு பின்னர் பள்ளிகள் திறக்கும் மாநிலமாக உருவெடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனை அடுத்து ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பதும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு உள்பட பெரும்பாலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் திறப்பதற்கு மாநில அரசுகள் ஆலோசனை செய்து வருகின்றன. பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 2 முதல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா வைரஸ் முதல் அலை, இரண்டாவது அலைக்கு பின் பள்ளிகள் திறக்கும் முதல் மாநிலமாக பஞ்சாப் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தமிழகம் உள்பட மேலும் சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version