இந்தியா

பஞ்சாபில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்: ஏன் தெரியுமா?

Published

on

பஞ்சாபில் ஒரு ஆண்டாக விவசாயிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தியது என்பதும் இந்த தொடர் போராட்டம் காரணமாக மத்திய அரசு விவசாயிகள் மசோதாவைத் திரும்பப் பெற்றது என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் தற்போது மீண்டும் பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்கசாவடிகளில் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்தது.

தமிழகத்தில் ரூ.25 முதல் ரூ.85 வரை சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படும் என தெரிகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அவதியில் உள்ள நிலையில் தற்போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர் .

இந்த நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு பல்வேறு மாநில அரசுகள் கண்டனம் தெரிவித்த நிலையில் சுங்கக் கட்டணம் உயர்வுவுக்கு விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது. சரக்கு வாகனங்கள் கட்டணம் ரூ.45 முதல் 140 வரை அதிகரிக்க உள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறி விவசாயிகள் சங்கம் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

60 கிலோ மீட்டருக்கு குறைவான தொலைவில் உள்ள சுங்கச் சாவடிகள் மூடப்படும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறிய நிலையில் தற்போது அதற்கு நேர்மாறாக சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டது.

 

seithichurul

Trending

Exit mobile version