இந்தியா

‘ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவச மின்சார்ம’- பஞ்சாபில் கெஜ்ரிவால் வாக்குறுதி

Published

on

பஞ்சாபில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ், அகாலி தளம் மற்றுமல்லாமல் ஆம் ஆத்மி கட்சியும் இந்த முறை தேர்தலைச் சந்திக்க உள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘ஆம் ஆத்மி கட்சி இந்த முறை பஞ்சாபில் ஆட்சி அமைத்தால், அனைத்து இல்லங்களுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் கொடுக்கப்படும். அதே போல, ஒரு வீட்டுக்கு தலா 300 யூனிட்டுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இது கெஜ்ரிவால் தரும் வாக்குறுதி.

இப்படிச் செய்வதன் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சுமார் 80 சதவீத மக்கள் மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்காது.

நான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றிருக்கும் டெல்லியில் அதைச் செய்து காண்பித்து உள்ளேன். எனவே, பஞ்சாபிலும் அதை நிச்சயம் செயல்படுத்திக் காட்டுவேன். தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசும், அதன் முதல்வரான அமரீந்தர் சிங்கும், தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை 5 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றவில்லை. எனவே அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டிய காலம் வந்து விட்டது’ என்று கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version