இந்தியா

முதல்வர் மருமகன் வீட்டில் அமலாகத்துறை சோதனை: ரூ.6 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல்

Published

on

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநில முதல்வரின் மருமகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்ததாகவும் இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 6 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்பட 5 மாநில தேர்தல் தேதி சமீபத்தில் அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாகவும் மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் அவர்களின் மருமகன் பூபேந்தர் சிங் என்பவரின் வீட்டில் இன்று திடீரென அமலாக்கத் துறையினர் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 6 கோடி கைப்பற்றப்பட்டதாகவும் மேலும் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி, இதுவொரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கண்டனம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version