இந்தியா

பாஜக எம்.எல்.ஏவை ஓட ஓட விரட்டியடித்த விவசாயிகள்: பஞ்சாபில் பெரும் பரபரப்பு!

Published

on

பஞ்சாப் மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேச வந்த பாஜக எம்எல்ஏ ஒருவரை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அடித்து விரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மத்திய அரசு சமீபத்தில் புதிய வேளாண் மசோதாவை இயற்றியதை அடுத்து மத்திய அரசு மீதும் பாஜகபினர் மீதும் விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அபோஹார் என்ற தொகுதியில் அருண் நாரங் என்ற எம்.எல்.ஏ பாஜக நடத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்தார்

அப்போது அவரை திரும்பிச் செல்லுங்கள் என அங்கிருந்த விவசாய அமைப்பினர் கோஷமிட்டனர். ஆனால் அதையும் மீறி அவர் பொதுக்கூட்ட மேடையை நோக்கி நடக்க தொடங்கினார். இதனையடுத்து ஆத்திரமடைந்த விவசாயிகள் அவரைத் தாக்கத் தொடங்கினார். அவருடைய சட்டை கிழிந்தன, கையில் இருந்த மைக் பிடுங்கி எறியப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக எம்எல்ஏ அருண் நாரங் உடனடியாக காரை நோக்கி ஓடினார்

அப்போது அங்கு வந்த பாதுகாப்பு படையினர் பாஜக எம்.எல்.ஏ அருண் நாரங்கை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்திற்கு பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக எம்எல்ஏவை தாக்கியவர்களை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version