சினிமா செய்திகள்

தியேட்டரில் ரிலீஸ் ஆன எட்டே நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிரபல நடிகரின் படம்!

Published

on

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியானது என்பதும் இதனை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் மாஸ்டர் பட தயாரிப்பாளருக்கு கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடித்த ’யுவரத்னா’ என்ற திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் இன்று இரவு இந்த படம் ஓடிடியில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் அம்மாநிலத்தின் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புனித் ராஜ்குமார் ஜோடியாக தமிழின் முன்னணி நடிகையான சாயிஷா நடித்த திரைப்படம் ’யுவரத்னா’. இவரது இந்த படம் ஏப்ரல் 1ம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் உள்பட அனைத்து நகரங்களிலும் வெளியானது. இந்த படம் சென்னையில் கூட ஒரு சில திரையரங்குகளில் தற்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென ஏப்ரல் 9 முதல் அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என்ற உத்தரவின் காரணமாக தான் படக்குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version