இந்தியா

ஜொமைட்டோவில் ரூ.28 லட்சத்திற்கு உணவு ஆர்டர் செய்த இளைஞர்.. வீட்டில சமைக்கறதே இல்லையா?

Published

on

உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமைட்டோ வந்தபிறகு பலரது வீட்டில் சமைப்பதே இல்லை என்றும் குறிப்பாக பேச்சிலராக வாழும் இளைஞர்களுக்கு இந்த நிறுவனங்கள் தான் சோறு போடுகின்றன என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு.

அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் புனேவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு வருடத்தில் 22 லட்ச ரூபாய்க்கு மேல் ஜொமைட்டோவில் உணவு ஆர்டர் செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புனேவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தினமும் ஆயிரக்கணக்கில் உணர்வு ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்ததாகவும் மொத்தம் 2022ஆம் ஆண்டில் ரூ.28 லட்சத்துக்கு மேல் அவர் தங்களது நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளதாகவும் ஜொமைட்டோ நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

அதேபோல் இன்னொரு நபர் ஒரே நாளில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கேக்குகளை மட்டுமே ஆர்டர் செய்ததாகவும் அந்த வாடிக்கையாளர் தங்களது நெருக்கமான வாடிக்கையாளர் என்றும் தெரிவித்துள்ளது. டெல்லியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் அதிகபட்சமாக 3,300 ஆர்டர்களை செய்து உள்ளார் என்றும் அவர் 1098 கேக்குகளை ஆர்டர் செய்துள்ளதாக ஜொமைட்டோ அறிவித்துள்ளது. மற்றொரு வாடிக்கையாளர் 2022ஆம் ஆண்டில் 6.96 லட்ச ரூபாய் மதிப்பிலான தள்ளுபடியை பெற்றுள்ளார் என்றும் ஜொமைட்டோ அறிவித்துள்ளது.

ஸ்விக்கி மற்றும் ஜொமைட்டோ நிறுவனங்கள் இந்தியா முழுவதும் 24 மணி நேரமும் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமாக உள்ளது என்றும் இந்த நிறுவனத்தில் எப்போது ஆர்டர் செய்த அடுத்த ஒரு சில நிமிடங்களில் உணவு கைக்கு வந்துவிடும் என்பதால் இதில் செய்வதில் அதிக மக்கள் விருப்பம் தருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே 2022ஆம் ஆண்டில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 186 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாக ஜொமைட்டோ அறிவித்து இருந்தது. தொடர்ந்து 6வது ஆண்டாக பிரியாணி அதிக அளவில் இந்தியாவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்றும் இரண்டாவது இடத்தை மசாலா தோசை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version