உலகம்

ஜெய்ஷ் இ முகமதுதான் தாக்கியது.. புல்வாமா தாக்குதல் பற்றி முஷாரப் பேட்டி!

Published

on

இஸ்லாமாபாத்: புல்வாமாவில் இந்தியா சிஆர்பிஎப் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மொத்தம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விளக்கம் அளித்து இருந்தார்.

தற்போது இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பான பல உண்மைகளை அவர் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு பேட்டியாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

முஷாரப் தனது பேட்டியில், மோடிக்கு இந்திய வீரர்கள் மீது உண்மையான அக்கறை கிடையாது. அவர் நன்றாக நடிக்கிறார். பாகிஸ்தான் மீது தேவையில்லாமல் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்தியா பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது என்பதே மிகப்பெரிய பொய். இது போன்ற பொய்களை பரப்ப வேண்டாம்.

seithichurul

Trending

Exit mobile version