உலகம்

இந்தியாவிற்கு கை கொடுப்போம்.. தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைய ஈரான் முடிவு!

Published

on

டெல்லி: இந்தியாவுடன் சேர்த்து ஈரானும் பாகிஸ்தானின் தீவிர அமைப்புகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தும் என்று ஈரான் அரசு தெரிவித்து உள்ளது.

புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரரகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்த தாக்குதல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் சோகத்தில் தற்போது ஈரானும் பங்கெடுத்து உள்ளது. பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

புல்வாமாவில் நடந்தது போலவே அதற்கு முதல்நாள் ஈரானிலும் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. பாகிஸ்தான் ஈரான் எல்லையில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் மொத்த 27 ஈரானை சேர்ந்த இஸ்லாமிக் ரேவலூஷனரி கார்ட்ஸ் வீரர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் அல்-அடில் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று இருக்கிறது.

இந்த தாக்குதல் ஜம்முவில் நடந்த தாக்குதல் போலவே நடந்து உள்ளது. ஈரான் பாகிஸ்தான் எல்லையில் இந்த ஈரான் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவிட்டு திருப்பும் நேரத்தில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. அதேபோல் காரில் வெடிகுண்டை சுமந்து கொண்டு வந்த தீவிரவாதி, ராணுவ வீரர்களின் வாகனம் மீது மோதி வெடிகுண்டை வெடிக்க வைத்து உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version