உலகம்

காங்கிரஸ் ஆட்சி இல்லை.. பாஜக ஆட்சி.. உடனே திருப்பி கொடுப்போம்.. அமித் ஷா அதிரடி!

Published

on

டெல்லி: இது காங்கிரஸ் ஆட்சி கிடையாது, பாஜக ஆட்சி, இந்த ஆட்சி கண்டிப்பாக தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேசி இருக்கிறார்.

அசாமில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் இன்று தேர்தல் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை, 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்திய பின் அமித் ஷா தொடங்கினார்.

அமித் ஷா தனது பேச்சில், அசாமின் தலைமகனான உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் மனேஸ்வர் பாசுமதிரியின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு மட்டும் கிடையாது, தாக்குதலில் பலியான எல்லா வீரர்களின் குடும்பத்திற்கும் என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன். அவர்கள் நம் நாட்டிற்காக உயிரையே தியாகம் செய்துள்ளார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ரத்தம் வீணாய் போகாது. அனைத்திற்கும் பதில் கிடைக்க வேண்டும். இந்திய ராணுவ வீரர்களின் ரத்தத்திற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். பதில் சொல்வார்கள்.

இது ஒன்றும் காங்கிரஸ் ஆட்சி கிடையாது. மத்தியில் இருப்பது பாஜக ஆட்சி. காங்கிரஸ்தான் இதில் நடவடிக்கை எடுக்காது. ஆனால் இந்த பாஜக ஆட்சி இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும். இந்த தாக்குதல் முழுக்க முழுக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்யப்பட்டதுதான்.

Trending

Exit mobile version