கிரிக்கெட்

CSK அணியில் முதல் முறையாக புஜாரா – அதிரடி ஐபிஎல் தொடருக்கு அவரின் ப்ரெப் இதுதான்!

Published

on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக களம் இறங்குகிறார் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா. இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடருக்குத் தன்னை எப்படி தயார்படுத்திக் கொண்டு வருகிறார் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

கிரிக்கெட் திருவிழா எனப்படும் ஐபிஎல் தொடர் வரும் 9 ஆம் தேதி, இந்தியாவில் தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை, சேப்பாக்கத்தில் இருக்கும் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டி மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் புஜாரா, ஐபிஎல் தொடருக்கு தன் ப்ரெப் குறித்துப் பேசுகையில், ‘நான் ஒன்றும் பெரிய பவர் ஹிட்டர் எல்லாம் இல்லை. அதற்கு எனது ஸ்ட்ரைக் ரேட் தான் உதாரணம். அதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். இருந்தாலும் அதே சமயத்தில் நான் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மாவிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள விரும்புகிறேன். இதில் ரோகித் பெரிய பவர் ஹிட்டர் எல்லாம் இல்லை. பந்தை சரியாக கணித்து அதற்கு ஏற்ற படி ஷார்டர் பார்மேட் கிரிக்கெட்டில் டைம் செய்கிறார்’ என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். 

மேலும் அவர், ‘அதே போல கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் மாதிரயான வீரர்கள் அக்மார்க் கிரிக்கெட் ஷாட்களை தான் விளையாடுகிறார்கள். அதே நேரத்தில் புதுவிதமான ஷாட்களையும் விளையாடுகிறார்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். எனக்கும் புதுவிதமான ஷாட் ஆட வேண்டுமென்ற மைண்ட் செட் உள்ளது. அதன் மூலம் சாதிக்க விரும்புகிறேன். இருந்தாலும் எது நமது பலமோ அதில் நிலையாக நின்று விளையாடுவது ஒவ்வொரு வீரருக்குமான உத்வேகம்.

தொடக்கத்தில் டி20 போட்டிகளில் விளையாடுவாதல் எனது டெஸ்ட் ஆட்டம் பாதிக்குமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. எது எனது பலமோ அது அப்படியே தான் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றுள்ளார். 

seithichurul

Trending

Exit mobile version