சினிமா செய்திகள்

தொகுப்பாளர்களாக மாறிய ‘குக் வித் கோமாளிகள்’

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிக மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குக்’களும் சரி கோமாளிகளும் சரி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக இந்த வாரம் கோமாளிகள் பேய் வேஷம் போட்டு வந்து அட்டகாசம் செய்தது அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் புகழ் பெற்ற கோமாளிகள் ஆன புகழ் மற்றும் மணிமேகலை ஆகிய இருவரும் இன்று ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். அந்த நிகழ்ச்சி அட்டகாசமாக தற்போது நடைபெற்று வருகிறது.

பிரபல சினிமா இணையத்தளமான பிஹைண்ட்வுட்ஸ் தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இன்று நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக புகழ் மற்றும் மணிமேகலை உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

முதல்முதலாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் புகழ் அட்டகாசமான காமெடி செய்யும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் நிகழ்ச்சியில் ஷிவாங்கி உள்பட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version