தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி மீது அதிமுக பிரமுகர் புகார்: மீண்டும் கைதா?

Published

on

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மூன்று கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி, பின்னர் ஜாமீனில் விடுதலை ஆகி உள்ள நிலையில், தற்போது அதிமுக பிரமுகர் ஒருவரே அவர் மீது புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கோவை தொண்டாமுத்தூர் ஊரில் நடந்து கடந்து 2021 ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் அவர்களது குடும்பம் குறித்தும் தனிப்பட்ட முறையில் ராஜேந்திரபாலாஜி தரக்குறைவாக பேசினார்.

தொண்டாமுத்தூர் தொகுதி முக ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு வரும்போது அவர் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று தூண்டும் விதத்தில் அவர் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி மத்திய அமைச்சர் ராசா குறித்தும் தவறான வார்த்தைகளில் பேசியதோடு இரண்டு மதங்கள் இடையே மோதல் ஏற்படுத்தும் விதமாகவும் பேசியுள்ளார் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு மீது மேற்கு மண்டல காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் மீண்டும் ஒருமுறை ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version