இந்தியா

இந்திய ஒன்றியம் என கூறி பதவியேற்ற புதுவை பாஜக அமைச்சர்கள்!

Published

on

புதுவை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அமைச்சர்கள் 50 நாட்களுக்குப் பிறகு இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியாகி இருந்தாலும், புதுவை முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி மட்டும் பதவியேற்றுக்கொண்டார்.

அமைச்சரவையில் யார் எல்லாம் இடம்பெறுவார்கள் என்று பேச்சுவார்த்தை நடக்கும் போதே, முதல்வர் ரங்கசாமி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் கொரோனா சிகிச்சை பெறும் அதே நேரத்தில் சுயேச்சைகளை வளைத்துப் போடுவது என பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு இணையான எம்.எல்.ஏக்களை பெற்றது.

எனவே பாஜக சார்பாக வேறு ஒருவர் புதுவை முதல்வராகப் பதவியேற்பார் என்று எல்லாம் கூறப்பட்டது. அமைச்சர்கள் பட்டியலில் யார் எல்லாம் அமைச்சர்கள் என்பதும் இழுபறியாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் அமைச்சர்கள் பட்டியலில் சுமுக முடிவு எடுக்கப்பட்டது. இன்று அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில் என்ன அச்சரியம் என்றால் பாஜகவுக்கு எதிராக திமுக அரசு எடுத்த ஒன்றிய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பாஜக அமைச்சர்கள் பதவியேற்றது தான்.

திமுக கூறிய ஒன்றிய அரசு என்ற வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்திய ஒன்றிய அரசின் புதுச்சேரி ஆட்சி பரப்பு அமைச்சர் என்று பொறுப்பேற்பதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

ஏ.நமசிவயம், கே லட்சுமி நாராயணன், சி டிஜாக ஒமர், சந்திரா பிரியங்கா மற்றும் ஏ கே சாய் ஜே சரவண குமார் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

இதன்மூலம் ஒன்றிய அரசு என்ற வார்த்தை சர்ச்சைக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version