இந்தியா

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழக பாடத்திட்டத்திற்குப் பதிலாக சிபிஎஸ்இ பாடத்திட்டம்!

Published

on

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழக பாடத்திட்டத்திற்குப் பதிலாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகும் என அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.

சிபிஎஸ்இ இணைப்பிற்கு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் விண்ணப்பிக்க வேண்டும் என புதுச்சேரி கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி அரசு கீழ் 712 அரசுப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 466 புதுச்சேரியிலும், 178 காரைக்காலிலும், 40 யானமிலும், 28 மஹியிலும் உள்ளன.

நீண்ட காலமாகவே புதுச்சேரி அரசுப் பள்ளிகளை சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது அதனை ரங்கசாமி தலைமையிலான அரசு நடைமுறைப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version