தமிழ்நாடு

புதுவையின் 12 திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Published

on

தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கிட்டத்தட்ட வேட்பாளர்களை அறிவித்து முடிந்துவிட்ட நிலையில் தற்போது புதுவையில் திமுக போட்டியிடும் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் திமுக மொத்தம் 13 தொகுதிகளில் போட்டியிடவுள்ள நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 12 தொகுதிகளின் திமுக வேட்பாளர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

உருளையன்பேட்டை தொகுதியில் கோபால், உப்பளம் தொகுதியில் அனியால் கென்னடி, மங்கலம் தொகுதியில் குமரவேல், முதலியார்பேட்டை தொகுதியில் சம்பத், வில்லியனூர் தொகுதியில் சிவா, நெல்லித்தோப்பு தொகுதியில் கார்த்திகேயன், ராஜ்பவன் தொகுதியில் சிவகுமார், மண்ணாடிப்பட்டு தொகுதியில் கிருஷ்ணன், காலாப்பட்டு தொகுதியில் முத்துவேல், திருபுவனை தொகுதியில் முகிலன், காரைக்கால் தெற்கு தொகுதியில் நாஜிம், நிரவி திருப்பட்டினம் தொகுதியில் நாகதியாகராஜன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் பாகூர் தொகுதியில் மட்டுமே வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்பதும் இந்த தொகுதிக்கு விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

seithichurul

Trending

Exit mobile version