தமிழ்நாடு

போராட்டத்திற்கு விடுமுறை விட்ட புதுச்சேரி முதல்வர்! பொங்கல் கொண்டாடிய பிறகு போராட்டம் தொடருமாம்

Published

on

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பொங்கல் விடுமுறைக்குப் பிறகு போராட்டம் தொடரும் என்று முழுக்கு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மக்களுக்கான நலத்திட்ட பணிகளை செய்ய விடாமல் கவர்னர் கிரண்பேடி தடுப்பதாக நாராயணசாமி குற்றம்சாட்டி வந்தார். மேலும், கிரண்பேடிக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக அறிவித்து, அதன்படி கடந்த 8 ஆம் தேதி முதல் அண்ணாசிலை பின்புறம் மறைமலை அடிகள் சாலையில் போராட்டம் நடத்தினார்.

இரவு பகலாக நடந்த இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கேயே உணவு அருந்தி, உறங்கி போராட்டம் நடத்துகின்றனர். இதற்காக துணைராணுவம், போலீசார் பலத்த காவல்பணியில் உள்ளனர்.  இதனால் பொதுமக்கள் அந்த பகுதிக்கே செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில்,  தற்போது பொங்கல் பண்டிகை வருவதால் மக்களுக்கு இடையூறாக போராட்டம் இருப்பதாக கூறி முதல்வர் நாராயணசாமி போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளார். மேலும்ம், பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version