தமிழ்நாடு

ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்: அரசு அறிவிப்பு!

Published

on

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் 20 மாதங்களுக்கு பின்னர் இன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என புதுவை அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாடு முழுவதும் இயங்கவில்லை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதேபோல் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் புதுவையில் ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. 20 மாதங்களுக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் இன்று மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வகுப்பறைகள் அரைநாள் மட்டுமே இயங்கும் என்றும் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே பள்ளிகள் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் புதுவை மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை எனவும் பெற்றோர் அனுமதி கடிதம் மாணவர்கள் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி கொரோனா தடுப்பு ஊசி செலுத்திய ஆசிரியர்கள் ஊழியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதுவையில் அரைநாள் மட்டுமே ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இயங்கிய நிலையில், இன்று முதல் முழு நேர வகுப்புகள் இயங்கும் என்றும் புதுவை மாநில அரசு தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version