தமிழ்நாடு

மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மூடப்படும்; புதுவை அரசு அறிவிப்பு

Published

on

மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என புதுவை மாநில அரசு சற்றுமுன் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அதே போல் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதுச்சேரியில் ஏற்கனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் அதாவது ஜனவரி 10 முதல் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மூடப்படும் என்றும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் புதுவை அரசு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறையும் வரை 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் கிடையாது என்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு தகுந்த கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவை அடுத்து தமிழகத்திலும் அதேபோன்று காலவரையற்ற அளவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version