தமிழ்நாடு

பாமகவின் 10 வேட்பாளர்கள் திடீர் வாபஸ்: என்ன காரணம்?

Published

on

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமக உள்ளது என்பதும் அந்த கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே. இதேபோல் புதுவையிலும் அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென புதுவையில் மட்டும் தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்தது என்பது தெரிந்ததே.

புதுவையில் பாமக 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக புதுச்சேரியில் 10 தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனுக்களை பாமக வாபஸ் செய்துள்ளது.

இந்த தகவலை பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ் அவர்கள் உறுதி செய்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணியில் பாமகவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததை அடுத்து பாமகவின் 10 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதாக தன்ராஜ் விளக்கமளித்துள்ளார்.

இதனை அடுத்து புதுவையில் பாமக போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதிமுக பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக தனித்துப் போட்டியிட்டதால் ஓட்டுகள் சிதறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பாமக வாபஸ் பெற்றுள்ளதால் அதிமுக-பாஜக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Trending

Exit mobile version