தமிழ்நாடு

தடுப்பூசி போட்டு கொண்டால் 10% டிஸ்கவுண்ட்: உணவகங்களின் அறிவிப்புகள்

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுவை மாநிலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் விடுதிகள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 10% டிஸ்கவுண்ட் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் புதுவையில் உள்ள மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில் கொரனோ இரண்டாவது அலை புதுவையிலும் தீவிரம் ஆவதை அடுத்து அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சில கட்டுப்பாடுகளை விதித்தார். திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது புதுவை மாநிலத்திலும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version