தமிழ்நாடு

வீடுவீடாக சென்று தடுப்பூசி சான்றிதழ் பரிசோதனை: அரசின் அதிரடி நடவடிக்கை!

Published

on

வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டவர்களின் சான்றிதழை பரிசோதனை செய்ய புதுவை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமானோர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி விட்டதால் இந்தியாவின் மூன்றாவது அலை தவிர்க்கப்பட்டது என்பதும் இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தடுப்பூசி போடுவதை தவிர்ப்பதற்காக போலியான தடுப்பூசி சான்றிதழை ஒருசிலர் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவ்வாறு போலிச்சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக தமிழகம் மற்றும் ஒரு சில மாநிலங்கள் அறிவித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி புதுச்சேரி முழுவதும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் ஆவணங்கள் இன்று முதல் பரிசோதனை செய்யப்படும் என்றும் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தியவர்கள் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு போலி சான்றிதழ் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது

பொது இடங்களுக்கு வருபவர்கள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டுமென ஏற்கனவே புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அறிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version