தமிழ்நாடு

கரண்ட் கட் என்பதால் ஊராட்சி தலைவரின் மண்டையை உடைத்த இளைஞர்!

Published

on

கரண்ட் கட் ஆனதால் ஊராட்சி தலைவரின் மண்டையை உடைக்க இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று மாலை முதல் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்த பகுதி ஊராட்சி தலைவர் செல்வராஜ் என்பவர் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்து, மீண்டும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்தார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் வந்து மின்வினியோகம் சிறிது நேரத்தில் வந்துவிடும் என்றும், அதனால் போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கார்த்திக் ராஜா என்ற இளைஞர் ஊராட்சி தலைவர் செல்வராஜ் என்பவரை கல்லால் தாக்கி மண்டையை உடைத்தார்.

இதில் செல்வராஜ் மண்டை உடைந்து ரத்தம் சட்டையில் வழிந்தது. உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்து பின்னர் சிகிச்சைக்காக ஊராட்சி தலைவர் செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஊராட்சித் தலைவரின் மண்டையை உடைத்த கார்த்திக் ராஜாவை தேடி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version