தமிழ்நாடு

புதுவை பல்கலைக்கழக தேர்வு தேதிகள் அறிவிப்பு!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும், பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும், ஒரு சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் புதுவையில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவும் ஊரடங்கு விதிக்கப்பட்டதன் காரணமாகவும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து தற்போது புதுவை பல்கலைகழக தேர்வு தேதிகள் குறித்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த தேர்வுகளை இம்மாதம் அதாவது ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை 5-ஆம் தேதி முதல் ஜூலை 17ஆம் தேதி வரை பல்கலைக் கழக தேர்வுகள் நடத்தப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு பிரிவு உத்தரவிட்டுள்ளது. தேர்வு அட்டவணையை பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

seithichurul

Trending

Exit mobile version