தமிழ்நாடு

புதுவையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்புகளை மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவ கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் விரைவில் கலைக்கல்லூரிகள் திறக்கப்படும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் பள்ளிகள் திறக்கும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உள்ளதால் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கும் என்றும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டதை அதிகாரிகள் உறுதி உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசின் பாடத் திட்டத்தை பின்பற்றுவதால் புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகளும் தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் புதுச்சேரியில் வரும் 26ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் கல்விக்கான அதிக தொகை ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version