தமிழ்நாடு

கர்நாடகாவை அடுத்து புதுவையிலும் மாணவிகளின் ஹிஜாப்புக்கு தடையா?

Published

on

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை என கல்லூரி நிர்வாகம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த கல்லூரியில் படித்து வரும் இந்து மாணவர்கள் காவி உடை அணிந்தும், தலித் மாணவர்கள் நீல உடை அணிந்தும் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இந்த பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருமாறி நீதிமன்றம் வரை சென்று உள்ள நிலையில் தற்போது புதுவையிலும் அதே போன்ற ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.

புதுவை அரியாங்குப்பம் என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முஸ்லிம் மாணவியிடம் ஹிஜப்பை அகற்றுமாறு பள்ளி நிர்வாகம் கூறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹிஜாபுடன் பள்ளிக்கு வந்த மாணவயிடம் ஹிஜாபை நீக்கி பையில் வைக்குமாறு தலைமை ஆசிரியர் கூறியதாகவும் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து மாணவர் கூட்டமைப்பு பள்ளியை முற்றுகையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில் தோன்றிய ஹிஜாப் எதிர்ப்பு தற்போது புதுவையிலும் பற்றி கொண்ட நிலையில் நாடு முழுவதும் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version