தமிழ்நாடு

புதுச்சேரிக்கு ஐந்து ஆளுநர்கள்: விளாசிய முதல்வர் நாராயணசாமி

Published

on

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்துக்கு என குடியரசுத் தலைவர் ஐந்து துணை நிலை ஆளுநர்களை நியமித்திருக்கிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது பேசிய நாராயணசாமி, புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலையிட 5 துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆளுநரின் செயலாளராக இருந்த தேவ நீதி தாஸ் ஓய்வுபெற்றதும் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர், அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதுகிறார், அதிகாரிகளை கூட்டத்துக்கு அழைக்கிறார். இது அவரது வேலை அல்ல. அவரை இரண்டாவது துணைநிலை ஆளுநராக எப்போது நியமித்தார்கள் என்று தெரியவில்லை.

மூன்றாவது துணை நிலை ஆளுநர் ஸ்ரீதர். அவர் அதிகாரிகளை அழைத்து கேள்வித் தாள்களைக் கொடுத்து பதில் கேட்கிறார். இது எந்த சட்டத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை. நான்காவது துணை நிலை ஆளுநராக ஒரு காவல்துறை அதிகாரி இருக்கிறார். அவர் வேலை புகார்களைப் பெறுவது, இவரே போய் விசாரணை செய்வது. ஐந்தாவது துணை நிலை ஆளுநர் ராஜ்பவனில் கேர் டேக்கராக இருப்பவர்தான்.

இவர்களை எல்லாம் குடியரசுத் தலைவர் எப்போது துணை நிலை ஆளுநராக நியமித்தார் என்று தெரியவில்லை. இன்னும் மூன்று மாதத்தில் கிரண்பேடி இங்கிருந்து போய்விடுவார். அப்போது இவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்? என்று கேள்வி எழுப்பினார் முதல்வர்.

Trending

Exit mobile version