தமிழ்நாடு

நாராயணசாமிக்கே சீட் இல்லையா? புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

Published

on

தமிழகத்தைப் போலவே புதுவையிலும் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் புதுவையில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 14 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி பெயர் இந்த பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதால், அந்த தொகுதியில் நாராயணசாமி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த முறை பொதுத் தேர்தல் நடந்தபோது நாராயணசாமி போட்டியிடவில்லை என்பதும் அதன் பின் முதல்வர் பதவி ஏற்ற பின் நெல்லிதோப்பு தொகுதியில் போட்டியிட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த முறை நெல்லிதோப்பு தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால் அவர் வேறு தொகுதிகள் போட்டியிடுவாரா என்பது குறித்து இனிமேல்தான் தெரியும்.

புதுவையில் அறிவிக்கப்பட்டுள்ள 14 காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதி பின்வருமாறு:

1. ஊசுடு – கார்த்திகேயன் 2. கதிர்காமம் – செல்வநாதன் 3. இந்திராநகர் – கண்ணன் 4. காமராஜ்நகர் – ஷாஜகான் 5. லாஸ்பேட்டை – வைத்தியநாதன் 6. முத்தியால்பேட்டை – செந்தில்குமரன் 7. அரியாங்குப்பம் – ஜெயமூர்த்தி 8. மணவெளி – அனந்தராமன் 9. ஏம்பலம் – கந்தசாமி 10. நெட்டப்பாக்கம் – விஜயவேணி 11. நெடுங்காடு – மாரிமுத்து 12. திருநள்ளாற் – கமலக்கண்ணன் 13. காரைக்கால் (வடக்கு) – சுப்ரமணியன் 14. மாஹே – ரமேஷ்.

Trending

Exit mobile version