தமிழ்நாடு

விஜய்யை புதுவை முதல்வர் சந்தித்தது ஏன்? பரபரப்பு தகவல்

Published

on

நடிகர் விஜய்யை நேற்று புதுவை முதல்வர் ரங்கசாமி அவரது வீட்டில் சந்தித்ததாகவும் இது ஒரு மரியாதை நிமித்தம் சந்திப்பு என இரு தரப்பிலும் கூறப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த சந்திப்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசியலை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் இந்த தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென விஜய்யை புதுவை முதல்வர் ரங்கசாமி சந்தித்து இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் மற்றும் புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகிய இருவரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தாலும் விஜய் தரப்பில் இருந்தோ அல்லது முதல்வர் ரங்கசாமி தரப்பிலிருந்து இருந்தோ இந்த தகவலை உறுதி செய்யவில்லை.

ஆனால் அதே நேரத்தில் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் இதுகுறித்து கூறியபோது விஜய் முதலில் நேரடியாக புதுவை அரசியலில் குதிக்க உள்ளதாகவும் அதன் பிறகுதான் தமிழக அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து ஆலோசிப்பதற்காகவே புதுவை முதல்வரை விஜய் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்.

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதுவையில் முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்படுவார் என்றும் அதன் பின்னரே அடுத்த தேர்தலில் தான் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக அவர் போட்டியிடுவார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version