தமிழ்நாடு

என்ன ……த்துக்கு ஓட்டு கேட்டு ஊருக்குள் வர: தம்பிதுரையை லெஃப்ட் ரைட் என விளாசிய பொதுமக்கள்!

Published

on

தமிழகத்தின் கரூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார் தம்பிதுரை. இதனையடுத்து அவர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே தம்பிதுரை வாக்கு கேட்டு சென்றபோது பொதுமக்களிடம் கோபமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மீண்டும் தம்பிதுரைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமம் கிராமமாக சென்று வாக்கு கேட்டார் தம்பிதுரை. அப்போது லந்தக் கோட்டை என்ற ஊரில் ஓட்டு கேட்டு தம்பிதுரை சென்ற போது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து தம்பிதுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊருக்குள் வரக்கூடாது என்று போராட்டத்தில் குதித்தனர்.

பல ஆண்டுகளாக எங்களுக்கு குடிக்கத் தண்ணீர் இல்லை என பலமுறை மனு கொடுத்தும் நீங்கள் கண்டுகொள்ளவில்லை. கலங்கலான தண்ணீர் தான் குடித்துவருகிறோம் நாங்கள். ஓட்டு கேட்டு வாங்கிட்டுபோவதோடு திரும்பிப் பார்ப்பதும் இல்லை நீங்கள். இப்படி இருக்கும் போது மீண்டும் எப்படி ஓட்டு கேட்டு வரலாம் என பொதுமக்கள் ஆவேசமாக கேள்வி கேட்டனர்.

இதனை இளைஞர்கள் வீடியோ எடுத்ததை கண்டு பதறிய தம்பிதுரை வீடியோ எடுக்க கூடாது என சத்தம் போட்டார். ஆனால் அதற்கு பொதுமக்கள், அப்படித்தான் எடுப்பானுங்க. என்ன ……த்துக்கு ஓட்டு கேட்டு ஊருக்குள் வர… என்று ஆவேசமாக கேட்டனர். மேலும் கலங்கலான தண்ணீர் பாட்டிலையும் தம்பிதுரையிடம் கொடுத்து இந்த தண்ணியை குடித்து பார் என குடிக்க கொடுத்தனர், இதனால் கோபமடைந்த தம்பிதுரை பொதுமக்களுக்கு பயந்து லந்தக் கோட்டையை விட்டு வேகமாக புறப்பட்டார். இது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version