இந்தியா

10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து: எந்த மாநிலத்தில் தெரியுமா?

Published

on

10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து என ஒடிசா மாநில முதல்வர் அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இரண்டு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் மேற்கு வங்க மாநிலத்தில் எட்டாம் கட்ட தேர்தல் முடிந்தவுடன் மத்திய அரசிடமிருந்து கடுமையான அறிவிப்புகள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன என்பதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு கூட ரத்து செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா? என்பது குறித்த ஆலோசனையில் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஈடுபட உள்ளார் என்பதும் இன்று மாலை இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஒடிசாவில் 10ஆம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்றும் கடந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், பொதுத்தேர்வு மதிப்பெண்கள் ஆக எடுத்து கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version