உலகம்

நவம்பரில் நியூ ஸ்டேட் பப்ஜி அறிமுகம்: அதிரடி அறிவிப்பு!

Published

on

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று பப்ஜி என்பதும் இந்த விளையாட்டை கோடிக்கணக்கானோர் தங்களது மொபைலில் டவுன்லோட் செய்து வைத்து விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விளையாட்டுக்கு கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் பலர் அடிமையாகி வருவதோடு ஒரு சிலர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் பப்ஜி விளையாட்டு நியூஸ் ஸ்டேட் வரும் நவம்பரில் அறிமுகமாக இருப்பதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பப்ஜி விளையாட்டின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்கொரியாவின் கேம் நிறுவனம் ஒன்றில் இந்த பப்ஜி நியூ ஸ்டேட் என்ற புதிய விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு ஆன்லைனில் நவம்பர் 11ஆம் தேதி முதல் உலகளாவிய அளவில் தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் டவுன்லோட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த விளையாட்டு குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது என்பதும் முன்பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் முன்பதிவு பெற்று சாதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பப்ஜி நியூ ஸ்டேட் விளையாட்டை அறிமுகம் செய்யும் கொரிய நிறுவனம், இந்திய நிறுவனங்கலான இந்திய கேமிங், இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் ஐடி என்டர்டெயின்மென்ட் (Indian gaming, e-sports and IT entertainment industry) துறையின் வளர்ச்சியில் அதிக முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டின் புதிய பரிணாமமான பப்ஜி நியூ ஸ்டேட் எந்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version