தமிழ்நாடு

பப்ஜி மதனுக்கு சிறையிவ் சொகுசு வசதி: லஞ்சம் கேட்டதாக உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்

Published

on

பப்ஜி மதன் மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் நிலையில் சிறையில் அவருக்கு சொகுசு வசதிகள் செய்து தருவதற்கு இலஞ்சம் கேட்ட சிறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யூடியூப் சேனல்கள் மூலம் பப்ஜி விளையாட்டு சொல்லி தருகிறேன் என்று கூறி குழந்தைகள் மற்றும் பெண்களை மனதளவில் பாலியல் துன்பம் செய்ததாக மதன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரது மனைவியும் இதற்கு உடந்தை என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பப்ஜி மதன் சிறையில் இருக்கும் நிலையில் சிறையில் அவருக்கு சொகுசு வசதிகளை செய்து கொடுப்பதற்காக அவரது மனைவி கிருத்திகாவும் சிறை அதிகாரிகள் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்கட்டமாக கூகுள் பே மூலம் 25 ரூபாய் அனுப்பிய தகவல் வெளியானதை அடுத்து இது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் புழல் சிறையில் உதவி ஜெயிலர் செல்வம் என்பவர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்ததை அடுத்து சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் அவர்கள் உத்தரவின்படி சிறை அதிகாரி செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version