தமிழ்நாடு

கிண்டல் செய்வதாக நினைத்து நிதியமைச்சர் பி.டி.ஆரிடம் பல்பு வாங்கிய நாரயணன் திருப்பதி!

Published

on

திமுக தலைமையிலான தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி பதவியேற்றது. இதைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வெளியிட்டு வருகிறது.

-அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக மே மாதமே ரூ.2000 வழங்கப்படும்.

-16.5.2021 முதல் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறது.

-சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் மகளிர் அனைவரும் கட்டணமின்றி பயணிக்கலாம்.

-மக்களிடம் பெற்ற மனுக்கள் மீதான குறைகளை நிவர்த்தி செய்ய ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறை உருவாக்கப்படுகிறது.

-கொரோனா பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைப் பெறலாம் உள்ளிட்ட திட்டங்களை அமல் செய்துள்ளது தமிழக அரசு.

இதையொட்டி பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நாராயணன் திருப்பதி, “வரலாறு காணாத வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது”- நிதியமைச்சர் தியாகராஜன். துண்டை போட்டாச்சு . இனி எப்படி வேண்டுமானாலும் தாண்டலாம்” என்று கேலி செய்தார்.

இதனால் கொதிப்படைந்த அமைச்சர் தியாகராஜன், ‘ஒரு தகுதியற்ற நபர், தன்னை அறிவுஜீவியாக காட்டிக் கொள்ள முயன்று அம்பலப்பட்டு நிற்கிறார்.

நான் சொன்ன பற்றாக்குறை என்பது அதிமுக அரசால் ஏற்பட்டது. நாராயணா’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version