தமிழ்நாடு

பொய் சொல்ல கூட குறைந்தபட்ச அறிவு வேண்டும், மாட்டுச்சாணி மூளைகளா? நிதியமைச்சர் பிடிஆர் ஆவேசம்

Published

on

பொய் சொல்வதற்கு கூட குறைந்தபட்ச அறிவு வேண்டும் என்றும் மாட்டு மூளைக்காரர்களுக்கு அந்த அறிவு இல்லை என்றும் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லக்னோவில் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் கலந்து கொண்ட நிலையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது தனக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருந்ததால் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் மேலும் லக்னோவிற்கு 2 விமானங்கள் மாறி செல்ல வேண்டும் என்றும் அதனால் ஒரு நாளாகும் என்றும் அதனால்தான் செல்லவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து டுவிட்டர் பயனாளிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் இருந்து லக்னோவிற்கு நேரடியாக விமானம் இருக்கிறது என்றும் அதிகபட்சமாக இரண்டு மணி நேரம்தான் பயண நேரம் ஆகும் என்றும் நிதியமைச்சர் ஒரு நாளாகும் என்று கூறியது ஏன் என்று தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெறும் அன்று பிடிஆர் அவர்களின் கொழுந்தியாள் மகள் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்க இருப்பதால்தான் அவர் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்றும் ஊடகமொன்று தெரிவித்திருந்தது. இதற்கு கடுமையாக பதிலளித்திருந்த பிடிஆர் அவர்கள் ’எனக்கு கொழுந்தியாவே இல்லை அப்படி இருக்கும்போது இல்லாத கொழுந்தியாள் மகளுக்கு விழா எப்படி நடக்கும்? என்றும் பொய் சொல்வதற்கு கூட குறைந்தபட்ச அறிவு வேண்டும் என்றும் மாட்டு மூத்திரம் குடித்து மூளை கெட்டுப் போனவர்களா நீங்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதேபோல் இன்னொரு டுவிட்டில் ஜிஎஸ்டி கூட்டத்தில் மனைவியுடன் செல்வதற்காக முதல்வரிடம் தனி விமானம் கேட்டதாகவும் முதல்வர் தர மறுத்ததை அடுத்து அவர் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்றும் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பிடிஆர் அவர்கள் பொய்யை மட்டுமேசொல்கிற முட்டாள்களே, எனது மனைவியை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள், மாட்டுச்சாண மூளை கொண்டவரே என்றும் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் என்ற பொறுப்பான நிலையிலிருக்கும் பிடிஆர் அவர்கள் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு ஏன் செல்லவில்லை என்பதற்கான சரியான காரணத்தை கூறாமல் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது நெட்டிசன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version