தமிழ்நாடு

’இயற்றலும் ஈட்டலும்’ என்ற குறளுடன் பட்ஜெட்டை தொடங்கிய நிதியமைச்சர்!

Published

on

தமிழக பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் சற்று முன்னர் சென்னை கலைவாணர் அரங்கில் வருகை தந்தனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

என்ற திருக்குறள் உடன் அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஆரம்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக நிதிநிலைமையை சீர் அமைக்கும் வகையில் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டது என்றும் கடந்த பத்து வருட அதிமுக அரசின் நிதி நிர்வாக சீர்கேட்டை சரி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும், பட்ஜெட் முன்னுரையின் போது நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சரின் ஆலோசனை, வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது என்றும், முதலமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதி கொண்டு உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் வெளிப்படையான அரசை உறுதிப்படுத்த உள்ளோம் என்றும் அடுத்த ஆண்டு திமுக அரசின் முழுமையான பட்ஜெட்டிற்கு தற்போதைய பட்ஜெட் அடித்தளமாக இருக்கும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த நிலையில் பட்ஜெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். பட்ஜெட் உரையில் தங்களுக்கு பேச வாய்ப்பு தரவில்லை என்று கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version