இந்தியா

30 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி43 ராக்கெட்!

Published

on

பூமியை மிகவும் துல்லியமாக கண்காணிக்கவும், வானிலை குறித்த துல்லிய தகவல்களை பெறவும் உதவும் பிஎஸ்எல்விசி-43 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.58 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் வெளிநாடுகளை சேர்ந்த 30 நானோ செயற்கைகோள்களையும் தாங்கி விண்ணில் பாய்ந்தது.

44.4 மீட்டர் உயரம் கொண்ட இந்த சி43 ராக்கெட்டில் புவி கண்காணிப்புக்கான ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. மேலும் அமெரிக்காவை சேர்ந்த 23 செயற்கைக்கோள்களும், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், மலேசியா, கொலம்பியா, ஃபின்லாந்து, நெதெர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோளும் இந்த ராக்கெட்டில் இடம்பெற்றுள்ளன.

இஸ்ரோ தயாரித்த ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைகோளை புவி வட்டப்பாதையில் 630 கிலோ மீட்டர் தொலைவிலும் மற்ற 30 செயற்கைகோள்களை 504 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டு இதனை வடிவமைத்து இன்று விண்னில் செலுத்தியுள்ளது.

இஸ்ரோ தயாரித்த இந்த 380 கிலோ எடைகொண்ட ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோள் இந்தியாவின் மேலாண்மை வனப்பகுதி, கடலோரப் பகுதி, உள்நாட்டு நீர் நீலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப்பணிக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version