இந்தியா

இன்று காலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி ராக்கெட்!

Published

on

பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது என்ற தகவல் இந்தியாவின் மற்றொரு சாதனையாக கருதப்படுகிறது.

19 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கவுண்ட்-டவுன் ஏற்கனவே தொடங்கியுள்ளது.

அமேசோனியா -1 உள்பட 19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாயும் இந்த ராக்கெட்,
சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று காலை சரியாக 10.24 மணிக்கு விண்ணில் பாயும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் முதன்முதலாக வணிக ரீதியில் இந்த ராக்கெட் விண்ணில் பாய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

637 கிலோ எடையுடைய முதன்மை செயற்கைக் கோளான அமேசானியா மற்றும் இஸ்ரோவின் சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் இந்த ராக்கெட்டில் செலுத்தப்படுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version