இந்தியா

வெற்றிகரமாக ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்: என்னென்ன பயன்கள்?

Published

on

இந்திய விண்வெளி கழகம் அதாவது ஐஎஸ்ஆர்ஓ அமைப்பு இன்று காலை சரியாக 5 59 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 52 என்ற ராக்கெட்டை ஏவியது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த தாகவும் இந்த ராக்கெட்டில் உள்ள ஐஓஎஸ் 04 என்ற செயற்கை கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியை ஆய்வு செய்வதற்காக ஐஎஸ்ஆர்ஓ அமைப்பு இந்த ராக்கெட்டை வடிவமைத்துள்ளது என்பதும் இந்த ராக்கெட்டில் உள்ள ஐஓஎஸ் 04 என்ற செயற்கைக் கோள் 1710 கிராம் எடை கொண்டது என்றும் பூமியிலிருந்து 579 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுவப்படும் என்றும் இதன் உதவியால் தட்பவெட்பநிலை விவசாயம் குறித்த தெளிவான புகைப்படங்கள் விஞ்ஞானிகளுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த ராக்கெட்டில் EOS04 இன்ஸ்பயர் சாட் 1, ஐ.என்.எஸ். 2டிடி ஆகிய மேலும் 2 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி. சி52 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதை அடுத்து விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version