இந்தியா

நாளை பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட்… தொடங்கியது கவுன்ட் டவுன்!

Published

on

பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட் நாளை விண்ணில் பாய உள்ள நிலையில் அதற்கான கவுன்ட் டவுன் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் காரணமாக தடைபட்டிருந்த இந்திய விண்வெளி மையத்தின் ஆராய்ச்சிப் பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டன. நீண்ட பணிகளுக்குப் பின் தற்போது பி.எஸ்.எல்.வி சி50 நாளை டிசம்பர் 17-ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட உள்ளது. இதற்கான கவுன்ட் டவுன் தற்போது தொடங்கியுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் ஆராய்ச்சி மையத்தில் உள்ள இரண்டாவது தளத்திலிருந்து ஏவுகணை நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட் தகவல் தொடர்பு வசதிக்கான சி-பேண்ட் அலைக்கற்றைப் பயன்பாட்டுக்காக ஏவப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் அலைவரிசைகளைக் கொண்டு இந்தியா மட்டுமல்லாது அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகளிலும் பயன்படுத்த முடியும்.

சதிஷ் தவண் தளத்திலிருந்து ஏவப்படும் 77-வது ஏவுகணையாக பி.எஸ்.எல்.வி சி50 உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version