வணிகம்

வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என ரூ. 8,500 கோடி வசூல் செய்த 11 வங்கிகள்!

Published

on

அரசுத் துறை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸ் என அழைக்கப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (minimum balance) பராமரிக்காததால் விதிக்கும் அபராதங்களின் வசூல் 35% அதிகரித்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) அபராதங்களை தளர்த்திய பின்னரும், இது நடந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், 11 அரசு வங்கிகள், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக, வாடிக்கையாளர்களிடமிருந்து மொத்தம் ரூ. 8,500 கோடி அபராதமாக வசூலித்துள்ளதாக The Businessline வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அபராத தொகைகள் ரூ. 25 முதல் ரூ. 600 வரை உள்ளன.

இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க தவறியதற்காக இந்த அளவுக்கு அதிகமான அபராதம் வசூலிக்கப்படுவது பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு வங்கிகளின் இந்த நடவடிக்கை மக்களிடையே கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.

அரசுத் துறை வங்கிகள், வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க தவறுவதால் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்யவே இந்த அபராதத்தை விதிக்கின்றன. எனினும், இந்த நடவடிக்கை பலரின் நிம்மதியைக் குலைக்கின்றது.

வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு இந்த விதிமுறைகளைப் பற்றி தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு வட்டாரங்களில் இருந்து எழுந்துள்ளன. குறிப்பாக, குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க முடியாத பொருளாதார சூழலில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அபராதத்தை விதிப்பது பொருத்தமற்றது என்பதே பலரின் கருத்தாகும்.

seithichurul

Trending

Exit mobile version