உலகம்

மது தவிர்த்து தயிர் குடியுங்கள்… சொன்ன அதிபருக்கு எதிராக வெடித்த போராட்டம்..!

Published

on

மது குடிப்பதற்கு பதிலாக தயிர் குடியுங்கள் என நாட்டு மக்களுக்கு அறிவுரை சொன்ன துருக்கி அதிபருக்கு எதிராக அந்நாட்டில் பெரிய போராட்டமே வெடித்துள்ளது.

துருக்கி அதிபர் தனது மத நம்பிக்கையால் மது குடிப்பதற்கு எதிராக நடப்பவர். கொரோனா கட்டுப்பாடுகளால் அந்த நாட்டில் கடந்த எட்டு, ஒன்பது மாதங்களாக மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இந்த சூழலில் மதுக் கடைகளைத் திறக்க வேண்டும் என விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதற்கு பதில் அளித்த அதிபர் மது குடிப்பதற்கு பதிலாக உடலுக்குக் குளிர்ச்சி தரும் தயிர் குடியுங்கள் என மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார் அதிபர். இதற்காகத் தான் துருக்கியில் போராட்டமே வெடித்துள்ளது. அதிபர் இப்படிச் சொன்னால் எங்கள் வியாபாரம் என்னாவது நாங்களும் வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டாமா எனக் கூறி மது விற்பனையாளர்கள், மதுக்கடை உரிமையாளர்கள் ஆகியோர் அதிபரின் பேச்சுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி மீண்டும் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version