சினிமா செய்திகள்

சர்கார் படத்தை எதிர்ப்பது கோழைத்தனம்: கமல்!

Published

on

சர்கார் படத்திற்கு அதிமுக அரசால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும் இல்லையெனில் பயங்கர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

இந்நிலையில், “முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்” என சர்கார் படத்திற்கும் நடிகர் விஜய்க்கும் ஆதரவாக கருத்து பதிவிட்டார். மேலும், அதிமுக அரசின் கோழைத்தனத்தை இது காட்டுகிறது என்று சாடினார்.

seithichurul

Trending

Exit mobile version