ஆரோக்கியம்

முட்டையைவிட அதிக புரதச்சத்துள்ள சைவ உணவுகள்- எடை குறைப்புக்கு இது முக்கியங்க!

Published

on

நம் உடலுக்குப் புரதச் சத்து என்பது மிக முக்கியமான ஒன்று. புரதம் குறைந்தால் அது உடலில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக சோர்வடைதல், முடி உதிர்தல், எலும்புத் தேய்மானம், களைப்பு உள்ளிட்டப் பிரச்சனைகள் புரதம் குறைந்தால் வரும். பொதுவாக முட்டைகளிலும், இறைச்சி வகைகளிலும் புரதம் அதிகம் இருக்கும். அதே நேரத்தில் சைவ உணவுகள் சிலவற்றிலும் புரதம் கொட்டிக் கிடக்கிறது அவற்றைப் பார்ப்போம். எடை குறைப்புக்கும் புரதச் சத்து அதிகமாக இருக்கும் உணவை உட்கொள்ள வேண்டும்.

1.பயறு வகைகள்:

பச்சைப் பயிறில் ஆரம்பித்து கொண்டைக் கடலை வரை அனைத்து வகை பயறு வகைகளிலும் புரதச் சத்துக் கொட்டிக் கிடக்கிறது. பயறு வகைகளை அவித்து, எண்ணெய் போட்டுத் தாளிக்காமல் அப்படியே சாப்பிடுவது அதிக பலன் தரும்.

2.பூசணி விதை:

வெறும் 30 கிராம் உள்ள பூசணி விதைகள் மூலம் 8.5 கிராம் புரதச் சத்தைப் பெற முடியும். சாலட் போன்ற உணவுகளில் பூசணி விதைகளைக் கொட்டிச் சாப்பிடலாம்

3.பாதாம் பருப்பு:

பாதாம் பருப்பு, அதிகம் புரதச் சத்து கொண்ட இன்னொரு உணவு. ஒரு நாளைக்கு 4 அல்லது 5 பாதம் கொட்டைகளை சாப்பிடலாம். இதன் மூலம் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச் சத்துகள் கிடைக்கின்றன.

 

Trending

Exit mobile version