தமிழ்நாடு

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்: உத்தேச பட்டியல்!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன என்பதும், இன்னும் ஓரிரு நாளில் இரண்டு கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை முடித்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்து பேசி முடித்துவிட்ட திமுக, அடுத்ததாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட ஒருசில கட்சிகளுடன் இன்றும் நாளையும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இந்த நிலையில் தற்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 தொகுதிகள், மதிமுகவுக்கு 5 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 5 தொகுதிகள் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 176-178 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version