தமிழ்நாடு

தமிழகத்தில் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

தமிழக அரசு இதுவரை சொத்து வரியை 3 முதல் 5 சதவீதம் மட்டுமே உயர்த்திய நிலையில் தற்போது திடீரென 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்ந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குடியிருப்புகள் வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் கட்டிடங்களுக்கான வரை 25 சதவீதம் முதல் 150 வரை உயர்த்தப்படுகிறது.

சென்னையில் புதிதாக இணைந்த பகுதிகளில் 600 முதல் 1200 சதுர அடி வரை உள்ள கட்டிடங்களூக்கு 50 சதவிகிதமும், 600 முதல் 1200 சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 75% சதவிகிதமும், 1200 முதல் 1800 வரை சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 100% சொத்து வரி உயர்வையும், 1800 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு 150 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று தமிழக இதர மாநகராட்சிகள் நகராட்சிகள் பேரூராட்சிகளிலும் சொத்துவரி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் 13-வது நிதி ஆணையம் கொடுத்த நிபந்தனைகளின் அடிப்படையில் தான் சொத்து வரி நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version